வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன


மக்களின் துயர் துடைக்கும் சிரச – சக்தி, டி.வி வன் நிவாரண பயணத்திற்கு மக்கள் வழங்கிய உதவிப் பொருட்கள் இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தற்போது எமது குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கையளித்துவருகின்றனர்.
மக்களுக்கு நேசக் கரம் நீட்டும் வகையில் கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் ஏற்பாடு செய்த நிவாரணப் பயணத்திற்கு
மனிதநேயம் கொண்ட மக்கள் வழங்கிய ஒத்துழைப்பினை எம்மால் மறந்து விடமுடியாது.
வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சிரச – சக்தி, டி.வி வன் நிவாரணப் பயணம் ஏற்பாடு செய்யபட்ட போது 48 மணித்தியாலத்திற்கும் குறைவான காலத்தில் பொது மக்கள் அதிகளவிலான உலர் உணவுப் பொருட்களையும் குடிநீரையும் எமக்கு கையளித்தனர்.
மூன்று இடங்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன், அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று லொறிகளில் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்று அதிகாலை வரை மக்கள் எம்மிடம் நிவாரணப் பொருட்களை கையளித்ததுடன், இன்று காலை நடைபெற்ற சர்வமத வழிபாடுகளின் பின்னர் நிவாரணப் பயணம் ஆரம்பமானது.
காலி வீதியூடாக களுத்துறை, காலி மாத்தறை பகுதிகளுக்கான நிவாரணப் பயணம் தொடர்ந்ததுடன், ஹய்லெவெல் வீதியூடாக இரத்தினபுரி, மற்றும் கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எமது குழுவினர் பயணித்தனர்.

About UK TAMIL