தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வைகோவின் பிணை மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு இன்று பிணை வழங்கியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவிற்கு செல்லவுள்ளதன் காரணமாக வைகோ நேற்று (23) பிணை கோரியிருந்தார்.
எனினும், அவரின் பிணை மனு நேற்று நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, வைகோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய வை. கோபாலசுவாமி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகக்கூறி அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.