இந்தியாவிலிருந்து – இன்று முற்கல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
இந்தியாவிருந்து நிவாரணப் பொருட்களுடன் வருகைத் தந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக ரோஹித் மிஸ்ரா செயற்படுகின்றார்.
இந்த படகில் பாதுகாப்பு பிரிவினர், சுழியோடிகள், மருத்துவ குழுவினர் உள்ளிட்ட 127 பேர் வருகைத் தந்துள்ளனர்.
உலர் உணவுப்பொருட்கள், குடிநீர் போத்தல்கள், கூடாரங்கள், பாதுகாப்புப் படகு, மருந்து பொருட்கள் உட்பட பல நிவாரணப் பொருட்களுடன் ஷர்துல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இடர்முகாமைத்துவ பதில் அமைச்சர் துனேஸ் கன்ஹந்த. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்து உத்தியோகபூர்வமாக பொருட்களை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதன்போது இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை தளபதி நிராஜ் ஆட்டிகல உள்ளிட்ட கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் நேற்றை யதினம் வருகை தந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கர்ச் கப்பல் இன்று நாடு திரும்பியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜலஸ்வா என்ற பெயரிடை மேலும் ஒரு கப்பல், நிவாரணப் பொருட்களுடன் நாளையதினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.