மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விமானப்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொஸ்முல்ல – தூலிஅல்ல தேயிலைத் தொழிற்சாலைக்கு சொந்தமான விடுதியில் சிக்குண்டிருந்த பெண்களை மீட்பதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த விமானப்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
மினுவன்கொட, கொட்டுகொட பகுதியில் வசிக்கும் 38 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.எம்.எஸ்.யாப்பாரத்ன என்பவரே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.