அண்டார்ட்டிகாவில் இருந்து குடிநீரை பெற்றுகொள்ள ஐக்கிய அரபு நாடுகள் திட்டம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அண்டார்ட்டிகாவில் இருந்து குடிநீரை பெற்றுகொள்ள ஐக்கிய அரபு நாடுகள் திட்டம்

அண்டார்ட்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019 ஆம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கிய அரபு நாடுகள் எண்ணெய் வளத்தில் செழித்து காணப்படுகின்றன.
இருப்பினும், அங்கு போதிய மழையின்றி மக்களிடையே குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது, மழை என்பதே அரிதான ஒன்றாகும். எனவே அங்கு கடல்நீரை குடிநீராக்கி தண்ணீர்ப் பிரச்சனையை சமாளித்து வருகின்றனர்.
தற்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க பனிப்பாறகைளை வெட்டி எடுத்து அதனை தண்ணீராக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இதற்காக புஜைரா துறைமுகத்தில் சிறப்பு ஆலை நிறுவப்படவுள்ளது, அதாவது, அண்டார்ட்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வருகின்றனர். பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு சுமார் 500 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது, இந்தத் திட்டம் 2019 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படவுள்ளதாக அமீரக தேசிய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL