நிவாரண யாத்திரைக்கான பொருட்கள் சேகரிக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நிவாரண யாத்திரைக்கான பொருட்கள் சேகரிக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சக்தி, சிரச, TV1 நிவாரண யாத்திரைக்கான பொருட்கள் சேகரிக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண யாத்திரைக்கு இரவு, பகல் பாராது மக்கள் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
கொழும்பு – 2, ப்ரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்திலுள்ள நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நிலையத்திற்கு நிவாரணப் பொருட்களுடன் மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.
பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் நிவாரண யாத்திரைக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தார்.
இரத்மலானை ஸ்டைன் கலையகத்திற்கும் நிவாரணப் பொருட்களுடன் மக்கள் வருகை தந்திருந்தனர்.
தெபானம கலையகத்திலுள்ள நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நிலையத்திலும் பெருமளவானவர்கள் பொருட்களை கையளித்தனர்.

About UK TAMIL