வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் பங்களாதேஷ் நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாழமுக்கம் பங்களாதேஷ் நோக்கி நகர்வதால் நாட்டில் நிலவிய வானிலையில் மாற்றம் ஏற்படலாம் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் தென்மேல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அதில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.