ரஜினியின் புதிய படம் ‘காலா’: காரணம் என்ன? - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ரஜினியின் புதிய படம் ‘காலா’: காரணம் என்ன?

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு காலா என பெயரிடப்பட்டுள்ளதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் அறிவித்துள்ளார்.
இத்திரைப்படம் ரஜினியின் 164 ஆவது திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயர் கரிகாலன். கரிகாலனின் சுருக்கம்தான் காலா.
காலா திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டுவிட்டனர். இது பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.
மே மாதம் 28 ஆம் திகதி காலா படப்பிடிப்பு தொடங்குவதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL