ஏலத்திற்கு வருகிறது நீல் ஆம்ஸ்ட்ராங் மண் எடுத்து வந்த ‘பை’ - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஏலத்திற்கு வருகிறது நீல் ஆம்ஸ்ட்ராங் மண் எடுத்து வந்த ‘பை’

நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனிலிருந்து மண் எடுத்து வந்த ‘பை’ ஜூலை 12 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளது.
அந்த பை சுமார் 25 கோடிக்கு மேல் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாசாவின் அப்பல்லோ- 2 விண்கலம் மூலம் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் ஆகியோர் சந்திரனுக்கு சென்றனர்.
சந்திரனில் முதன்முதலாகக் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் ஆய்வுகளுக்காக அங்கிருந்து மண், பாறை படிவங்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றை பையில் எடுத்து வந்தார்.
அதில் 500 கிராம் மண், 12 பாறை படிவங்கள் போன்றவை இருந்தன.
சந்திரனில் 5 பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இந்த மண் மற்றும் பாறைகள் நினைவுச் சின்னங்களாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சந்திரனில் இருந்து மண் எடுத்துவரப்பட்ட பை ஏலத்தில் விடப்படுகிறது.
நியூயார்க்கில் உள்ள சோத்பீ மையத்தில் அந்த பை ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ-2 விண்கலம் சந்திரனில் இருந்து பூமியில் தரை இறங்கிய ஜூலை 20 ஆம் திகதியிலேயே ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL