300 பிக்குகள் யாழ் வருகை : குழப்பங்கள் நேருமோ என அச்சம்; பொலிஸார் தீவிர பாதுகாப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

300 பிக்குகள் யாழ் வருகை : குழப்பங்கள் நேருமோ என அச்சம்; பொலிஸார் தீவிர பாதுகாப்பு

தெற்­கி­லி­ருந்து சுமார் 300 பிக்­கு­கள் நேற்று திடீ­ரென யாழ்ப்­பா­ணம் வந்­த­னர். குடா­நாட்­டில் உள்ள விகா­ரை­க­ளில் அவர்­கள் வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­னர்.
நாவற்­கு­ழி­யில் பல­வந்­த­மாக உரு­வாக்­கப்­பட்ட சிங்­க­ளக் குடி­யி­ருப்­பில் விகாரை ஒன்றை அமைப்­ப­தற்­காக அடிக்­கல் நடப்­பட்­ட­தற்கு எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்ள நிலை­யில் பிக்­கு­க­ளின் வருகை பல சந்­தே­கங்­க­ளை­யும் குழப்­பங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
பிக்­கு­க­ளின் வரு­கை­யால் குழப்­பங்­கள் ஏதும் ஏற்­ப­டலாம் என்­கிற எதிர்­பார்ப்­புக் கார­ண­மாக அவர்­க­ளைச் சுற்றி ஏரா­ள­மான பொலி­ஸார் சிவில் உடை­யில் கட­மைக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.
யாழ்ப்­பா­ணம் நாக­வி­காரை மற்­றும் நாவற்­கு­ழி­யில் அமைக்­கப்­பட இருக்­கும் விகா­ரைக்­கும் கடந்த 25ஆம் திகதி 300 பௌத்த பிக்­கு­கள் வரு­வ­தா­கக் கூறப்­பட்­டது. அது பற்­றிய செய்­தி­கள் வெளி­யான
நிலை­யில் அந்­தப் பய­ணம் இடம்­பெ­ற­வில்லை. இந்த நிலை­யில் 6 பேரூந்­து­க­ளில் 300 பிக்­கு­கள் ஏ9 பாதை­யூ­டாக யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டிற்கு வருகை தந்­த­னர்.
ஆனை­யி­ற­வைத் தாண்டி மீசாலை புத்­தூர்ச் சந்தி வழி­யாக நிலா­வ­ரைக் கிணற்­ற­டிக்கு வந்த அவர்­கள் அங்­கி­ருந்து யாழ்ப்­பா­ணம் ஊ◌டாக காங்­கே­சன்­து­றைக்கு சென்று அங்­கி­ருந்து மாத­கல் வழி­யாக குறி­கட்­டு­வான் ஊடாக நயி­னா­தீவு விகா­ரைக்­குச் சென்று இரவு அங்­கேயே தங்கி சிறப்­புப் பூசை வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

About UK TAMIL