இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார இங்கிலாந்தில் நடைபெறும் பிராந்திய கிரிக்கெட் தொடருடன் முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
துடுப்பாட்ட வீரர்களில் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடந்த 2015 ஆம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
டெஸ்ட் போட்டிகளின் ஓய்வுக்கு பின்னர் குமார் சங்கக்கார முதல் தர கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்தின் சரே பிராந்தியத்திற்கான விளையாடி வந்தார்.
முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்த குமார் சங்கக்கார ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
134 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சரே பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள குமார் சங்கக்கார அந்த அணிக்காக 11 இரட்டை சதங்களை விளாசியுள்ளார்.
இன்னும் அதிக காலம் கிரிக்கெட்டில் நீடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் இளையோருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு தான் ஓய்வு பெறும் தீர்மானத்தை எடுத்ததாக சங்கக்கார தெரிவித்துள்ளார்.